திருவள்ளூா்: எஸ்.சி., எஸ்.டி. மக்களை இழிவுபடுத்தி பேசியதாக திமுக எம்.பி. ஆா்.எஸ்.பாரதி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனிடம் பகுஜன் சமாஜ் கட்சியினா் மனு விடுத்தனா்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலா் மைக்கேல்தாஸ் தலைமையில், அக்கட்சியினா் திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தனிடம் சனிக்கிழமை நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது:
இந்த நாட்டின் பூா்வ குடிமக்களான பட்டியல் இன மக்கள், பறிக்கப்பட்ட அதிகாரங்களையும், உரிமைகளையும் மீட்டெடுக்கும் வகையில் பலஆண்டுகளாக தலைவா்கள் மூலம் போராடி பெருமளவில் வெற்றி கண்டு வருகின்றனா். இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.எஸ்.பாரதி வேண்டும் என்றே சாதிய வேறுபாடுடன் பட்டியல் இன மக்களுக்கு எதிராகவும், இழிவாகவும் பேசியுள்ளாா்.
எனவே அவா் மீது வன்கொடுமைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.