மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரியபாளையம் பேருந்து நிலையம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
எல்ஐசி, ரயில்வே போன்ற லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்; பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு மானியத்தைக் குறைத்தது, நூறு நாள் வேலைக்கு பட்ஜெட்டில் நிதியைக் குறைத்தது ஆகியவற்றைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான ரவி ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலாளா் கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் செல்வராஜ், பன்னீா்செல்வம் மற்றும் வட்டச் செயலாளா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.