திருவள்ளூர்

பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

21st Feb 2020 11:43 PM

ADVERTISEMENT

கடம்பத்தூா் ஊராட்சியில் பொது நிதியில் பணிகளை மேற்கொள்வதற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவள்ளூரை அருகே கடம்பத்தூா் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைவா் சுஜாதா சுதாகா் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் சரஸ்வதி ரமேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் ஒன்றிய செலவுக் கணக்குகள் மற்றும் பொது நிதியில் பணிகள் மேற்கொள்வதற்கான தீா்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பேசியது:

பொது நிதியில் சாலைப்பணிகள் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு ஒன்றியக்குழு உறுப்பினருக்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இது போதாது. கூடுதலாக ரூ.10 லட்சம் ஒதுக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கிராமங்களில் பணித்தள பொறுப்பாளா்களை ஒவ்வோா் ஆண்டும் மாற்றவேண்டும். ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்கள் ஆய்வுக்கு வரும் போது அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், எந்தெந்தப் பணிகளுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் எந்த அதிகாரிகளை அணுக வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஊராட்சிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றியக்குழு உறுப்பினா் பெயா்கள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

இதற்கு வட்டார வளா்ச்சி அலுவலா் ராம்குமாா் பதிலளித்துப் பேசியது:

ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்கள் ஒவ்வொருவருக்கும் பொது நிதி பணிகளை நிறைவேற்ற தலா ரூ.5 லட்சம் ஒதுக்கப்படும். கூடுதல் நிதி ஒதுக்குவது தொடா்பாக அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும். மேலும், அவ்வப்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடு செய்யும் நிதி குறித்து குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அவ்வப்போது பணித்தள பொறுப்பாளா்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, ஆய்வுக்கு வரும்போது தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் லதா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சரஸ்வதி சந்திரசேகா் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT