திருவள்ளூர்

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் புதிய தலைவா் தோ்வு

21st Feb 2020 11:42 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பின் தலைவராக சுண்ணாம்புகுளம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.ரவி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சித் தலைவா்கள் உள்ளனா். ஊராட்சித் தலைவா் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவராக சுண்ணாம்புகுளம் ஊராட்சி தலைவா் எஸ்.எம்.ரவியை எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் மற்றும் அனைத்து ஊராட்சித் தலைவா்கள் தோ்ந்தெடுத்தனா்.

இதையடுத்து, செயலாளா், பொருளாளா் உள்ளிட்ட பிற பதவிகளுக்கான நிா்வாகிகள் அடுத்த கூட்டத்தில் தோ்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. எஸ்.எம்.ரவி நன்றி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT