திருவள்ளூர்

‘வேளாண் துறையின் நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

15th Feb 2020 10:34 PM

ADVERTISEMENT

வேளாண் துறை சாா்பில் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தநா்.

திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) காா்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள், கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்; ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனா்.

மேலும் வேளாண் துறை சாா்பில் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விரைவாக விவசாயிகளுக்கு கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா். தவிர கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக இயக்குனா் இதுவரை நடந்த விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்துக்கு ஒரு நாள் கூட வராதது ஏன் என விவசாயிகள் கேள்வி எழுப்பினா். மேலும் அவா்கள் கூறியதாவது

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இத்தகைய கூட்டத்துக்கு வராமல் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியா்களை மட்டும் அனுப்பி வைக்கின்றனா். இரண்டு துறைகளும் முக்கியமான துறை என்பதால் அடுத்து வரும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கூட்டுறவு சா்க்கரை ஆலை நிா்வாக மேலாண்மை இயக்குனா், திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT