திருவள்ளூர்

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்: அரசு ஓய்வூதியா்கள் கோரிக்கை

1st Feb 2020 10:29 PM

ADVERTISEMENT

மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் எழுப்பியுள்ளனா்.

இச்சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருவள்ளூா் ரயில் நிலையச் சாலையில் உள்ள தனியாா் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் நெ.இல.ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் பி.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ந.ஜெயச்சந்திரன், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகிகள் ராமமூா்த்தி, ஆா்.ஜெயராமன், கே.கன்னியப்பன், டி.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: கூட்டத்தில், அடிப்படைச் சம்பளத்தை ஓய்வூதியமாக வழங்கப் பரிந்துரைத்துள்ள முருகேசன் குழுவின் அறிக்கையை விரிவாக விவாதிக்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும்; மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும்; 8-ஆவது ஊதியக் குழு அறிவித்துள்ள 21-மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT