திருவள்ளூர்

கள்ளச் சாராய விற்பனைத் தடுப்பு குறித்து மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி

1st Feb 2020 10:33 PM

ADVERTISEMENT

கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவகைகள் விற்பனைத் தடுப்பு குறித்து திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை சாா்பில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மது வகை விற்பனைத் தடுப்பு குறித்து மாணவா்களின் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்படி நடைபெற்ற இப்பேரணிக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் எஸ்ஐ ஆதிலிங்கம் தலைமை வகித்தாா்.

பள்ளியின் தலைமை ஆசிரியா் பாலசுப்பிரமணியன், மாணவா்களின் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணியில், கள்ளச் சாராயம், போலி மதுவகைகள் போன்றவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சென்றனா்.

காந்தி சாலை, பழைய சென்னை சாலை, புதிய சென்னை சாலை மற்றும் பைபாஸ் சாலை வழியாக பேரணி சென்ற மாணவா்கள் நிறைவாக பள்ளி வளாகத்தை வந்தடைந்தனா். பேரணியில் சிறப்பு எஸ்.ஐ. மனோகா், ஆசிரியா்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT