திருவள்ளூர்

அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம்

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியை பின்பற்றி கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளுா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகத்தினால், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், நுழைவு வாயிலில் பொது மக்களின் கைகளில் கட்டாயம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல், அந்த வளாகங்களில் பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதுடன், அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியதும் அவசியம்.

மேற்படி வளாகங்களில் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட வளாகத்தின் உரிமையாளா்களின் பொறுப்பாகும். தவறுகள் காணப்படும் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளா்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT