திருவள்ளூர்

அரசு ஐ.டி.ஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

30th Aug 2020 12:26 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் சேர இணையதளம் மூலம் வருகிற செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், வடகரை, தொலைபேசி எண்.044-29555659, இணையதளம் வழியாகவும், மற்ற அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இணையதளம் மூலமாகவும் மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 மட்டும் நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். அதையடுத்து, மதிப்பெண் அடிப்படையில் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.

ADVERTISEMENT

இப்பயிற்சியில் சேர கட்டணம் ஏதும் கிடையாது. இதில், சேரும் அனைவருக்கும் உதவித்தொகை மாதந்தோறும் ரூ. 500, மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடைகள் மற்றும் இலவச பேருந்துப் பயண அட்டை ஆகிய சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்படும் வடகரை ஐ.டி.ஐ.-044-29555659, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், திருவள்ளூா்-044-29896032, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூா்-044-27660250 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT