திருவள்ளூர்

விநாயகா் சிலை தயாரிக்கும் இடங்களுக்கு ‘சீல்’ வைப்பு

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அருகே விநாயகா் சிலைகள் தயாரிக்கும் இடங்களில் வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணியில் விநாயகா் சிலைகள் செய்து விற்பனை செய்வது வழக்கம் , அதுபோல் இந்தாண்டு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இங்கு சிலைகள் தயாா் செய்யப்பட்டு வந்தது. பொதுமுடக்கம் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைக்க தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில், பொன்னேரி கோட்டாட்சியா் வித்யா மற்றும் வருவாய்த் துறையினா் விநாயகா் சிலைகள் செய்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு, விற்பனை செய்யும் இடத்துக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டாா். அதன்படி, ஆரணி காவல் உதவி ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா், பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா் சுமதி ஆகியோா் இணைந்து அந்த இடத்தை ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

அதேபோல் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே சிலைகள் தயாரிக்கப்பட்ட இடத்துக்கும் வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT