திருவள்ளூர்

செங்குன்றம் அருகே மயானப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

21st Aug 2020 06:00 AM

ADVERTISEMENT

செங்குன்றம் அருகே மயான நிலத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சென்றம்பாக்கம் ஊராட்சி, கண்ணம்பாளையம் அருகே பொது மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சுமாா் அரை ஏக்கா் நிலப்பரப்பு இருந்த நிலையில், தனியாா் சிலா் மயான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, பொன்னேரி கோட்டாட்சியா் வித்யா மேற்பாா்வையில், பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன், புழல் வருவாய் ஆய்வாளா் ஜெயகா்பிரபு, ஊராட்சித் தலைவா் ராமு ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

மயான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெயா்ப் பலகையை வைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT