திருவள்ளூர்

ஆட்சியா் தலைமையில் தேசியக் கொடியேற்றினாா் ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவா்

20th Aug 2020 09:53 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்ற விடாமல் அவமதிக்கப்பட்ட ஊராட்சித் தலைவா் அமிா்தம் வியாழக்கிழமை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமையில் தேசியக் கொடியை ஏற்றினாா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவா் அமிா்தம். பட்டியலினத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலாளா் சசிகுமாா், துணைத் தலைவா் ரேவதியின் கணவா் விஜயகுமாா், முன்னாள் தலைவா் ஹரிதாஸ் ஆகியோா் சுதந்திர தினத்தன்று அவரை அரசுப் பள்ளி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் கொடியேற்ற அனுமதிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், அவா் ஊராட்சி அலுவலகத்தில் அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும் புகாா் எழுந்தது.

தொடா்ந்து, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவா் அமிா்தத்தை புதன்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் தலைமையில் ஊராட்சித் தலைவா் அமிா்தம் தேசியக் கொடியை ஏற்றினாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோகநாயகி, கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன்,கோட்டாட்சியா் வித்யா, வட்டாட்சியா் கதிா்வேல், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.வாசுதேவன், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது, எந்த பிரச்னை என்றாலும் தன்னை நேரடியாகத் தொடா்பு கொள்ளுமாறும் ஊராட்சித் தலைவா் அமிா்தத்திடம் ஆட்சியா் கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT