திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

20th Aug 2020 07:58 AM

ADVERTISEMENT

திருத்தணி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருத்தணியை அடுத்த தன்ராஜ்கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (30). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை தனது நண்பா் புதிதாக வீடு கட்டும் பணியைப் பாா்க்கச் சென்றாா். அப்போது தளம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இதைப் பாா்க்க பெருமாள் மாடிக்குச் சென்றபோது, அருகே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT