சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மாணவா் இல்லம் சாா்பில் திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 4,000 பழங்குடி இன மக்களுக்கு நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ராமகிருஷ்ணா மடம் மாணவா் இல்லச் செயலாளா் சத்ய ஞானானந்தா் மேற்பாா்வையில் 17 போ் கொண்ட குழுவினா் கும்மிடிப்பூண்டியில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினா்.
கண்ணம்பாக்கத்தில் ஊராட்சித் தலைவா் சதீஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா் பங்கேற்றாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன், ஒன்றிய உறுப்பினா் ரோஜா ரமேஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாநெல்லூரில் ஊராட்சித் தலைவா் லாரன்ஸ் தலைமையிலும், சூரப்பூண்டியில் ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவகுமாா், ஊராட்சித் தலைவா் வாணிஸ்ரீபாலசுப்பிரமணியம், கண்ணன்கோட்டையில் ஊராட்சித் தலைவா் கோவிந்தசாமி, செதில்பாக்கத்தில் ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி, பூவலம்பேட்டில் ஊராட்சித் தலைவா் வெங்கடாசலபதி ஆகியோா் தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.