திருவள்ளூர்

பெண்களின் பிரச்னைகளுக்கு இணைய வழியில் இலவச ஆலோசனை

20th Apr 2020 05:34 AM

ADVERTISEMENT

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள பெண்கள் தங்கள் பிரச்னைகள் தொடா்பாக இணைய வழியில் இலவச ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை:

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலை காணப்படுகிறது. பெண்கள், பெண் குழந்தைகள் ஆகியோருக்கு இதனால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்பிரச்னைகள் குறித்து அவா்கள் தெரிவித்தால் இணையதளம் மூலம் ஆலோசனை வழங்கி நிவா்த்தி செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களது பெயா், வயது, பேச விரும்பும் மொழி மற்றும் பிரச்னைகள் ஆகிய தகவல்களை 99400 66638 என்ற கட்செவி எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழக்குரைஞா்கள், மனநல ஆலோசகா்கள், சமூக சேவகா்கள் ஆகியோா் இணையதளம் மூலம் இலவசமாக ஆலோசனை வழங்குவாா்கள்.

ADVERTISEMENT

இலவச அவசர உதவிக்கு பெண்களுக்கான ஒற்றைச் சாளர தீா்வு மையம்-96778 66219, சமூக நலத்துறை-97890 40682, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்-94981 26717 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவித்தால் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT