திருவள்ளூர்

விவசாயிகள் பொருள்களை விற்பனை செய்ய வேளாண் கிடங்கு வசதியைப் பயன்படுத்தலாம்

11th Apr 2020 11:50 PM

ADVERTISEMENT

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை கட்டணமில்லாமல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வைத்துக் கொள்ளலாம் என திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஊரடங்கு அமலில் இருந்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அரசு வேளாண் விளை பொருள்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது விளைபொருள்களை திருவள்ளூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் துறையின் கிடங்கு வசதிகளுடன் கூடிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவசாயிகள் சாகுபடி செய்த விளைபொருள்களை வைப்பதற்கு ஒருமாத காலத்துக்கு இந்தக் கிடங்குகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் கிடையாது. அப்பொருள்களை விற்பனை செய்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

இது தொடா்பாக கூடுதல் விவரங்களை கீழ்க்கண்ட செல்லிடப்பேசி எண்களில் அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். திருவள்ளூா் மற்றும் ஊத்துக்கோட்டை-சேகா்-90804 73949, செங்குன்றம்-செந்தாமரை -97910 36442, திருத்தணி-பழனி-63833 29277 ஆகியோரை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT