திருவள்ளூர்

‘இடைவெளிவிட்டு அறுவடைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’

7th Apr 2020 12:10 AM

ADVERTISEMENT

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் அறுவடைப் பணிகளை போதிய இடைவெளிவிட்டு மேற்கொள்ள வேண்டும் என திருவூா் வேளாண்மை அறிவியல் மையம் ஆலோசனை அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், விவசாயப் பணிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அறுவடை நேரத்தில் விவசாயிகள் கட்டாயம் ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம்.

நெல் வயல்களில் அறுவடைப் பணிகளில் ஈடுபடும் போது கட்டாயம் 4-5 அடி இடைவெளிவிட்டு ஆள்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதேபோல், இப்பணியில் ஈடுபடுவோா் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோல், அவ்வப்போது சோப்பு உபயோகித்து, கை கழுவ வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT