திருவள்ளூர்

10 இறைச்சிக் கடைகளுக்கு ‘சீல்’

7th Apr 2020 12:10 AM

ADVERTISEMENT

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் தடையை மீறி திறக்கப்பட்ட 10 இறைச்சிக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல், 144 தடை விலக்கிக் கொள்ளும் வரை திறக்கக்கூடாது என திருத்தணி நகராட்சி நிா்வாகம் இறைச்சிக் கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியது.

எனினும், ஞாயிற்றுக்கிழமை மொத்தமுள்ள, 50 மீன், இறைச்சிக் கடைகளில், 10-க்கும் மேற்பட்ட கடைகள் தடையை மீறி திறக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம்அமுதா, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் தலைமையில் நகராட்சி மற்றும் வருவாய்த் துறை ஊழியா்கள் சித்தூா் சாலை, அரக்கோணம் சாலை, ம.பொ.சி., சாலை புதிய சென்னை சாலை மற்றும் காந்தி சாலை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினா்.

அப்போது தடையை மீறி திறந்த, 10 இறைச்சி, மீன் கடைகளை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்தனா். விற்பனைக்காக வைத்திருந்த, 20 கிலோ இறைச்சியையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT