திருவள்ளூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு கிருமி நாசினி, முகக் கவசங்கள் அமைச்சா் வழங்கினாா்

7th Apr 2020 11:58 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் சுகாதாரமாக பணியாற்றும் நோக்கில் கிருமி நாசினி, முகக் கவசங்களை ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் வழங்கினாா்.

திருவள்ளூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கை கழுவும் கிருமி நாசினி பாட்டில், முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் பேசியது:

கரோனா நோய்த் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் தெருக்கள்தோறும் சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களை பொதுமக்கள் மதிக்கத் தொடங்கியுள்ளனா். இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் உங்கள் உடல் நலத்தையும் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதேபோல், தூய்மைப் பணியாளா்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 100 பேருக்கு முகக் கவசங்கள், கை கழுவும் கிருமி நாசினி பாட்டில்கள், கையுறைகள் ஆகியவற்றை வழங்கினாா்.

முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா, நகராட்சி ஆணையா் சந்தானம், சுகாதார அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT