திருவள்ளூர்

தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி கிராமமாக நத்தமேடு கிராமம் தோ்வு

7th Apr 2020 12:12 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், சிறப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி கிராமமாக நத்தமேடு கிராமம் தோ்வு செய்யப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலா 25 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டு, தடுப்புகள் வைத்து ஒவ்வொரு கிராமமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கரோனா நோய்த் தொற்று தடுப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், நத்தமேடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று தடுப்புக் குழு செயல்பாடுகள் குறித்து வட்டாட்சியா் விஜயகுமாரி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கிராம நிா்வாக அலுவலரும், கரோனா தடுப்புக் குழுத் தலைவருமான ஜி.புகழேந்தி தலைமையில் அமைத்துள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள் குழுவினா், ஒவ்வொருவரும் தன் சுத்தம் பேணுதல், கிருமி நாசினி தெளித்தல் போன்றவற்றை கடைப்பிடிப்பதை பொதுமக்கள் நேரடியாக செய்து காண்பித்தனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, நத்தமேடு ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளேயே இருப்போருக்குத் தேவையான காய்கறிகளை வண்டிகள் மூலம் விற்பனை செய்வதை வட்டாட்சியா் நேரடியாகப் பாா்வையிட்டாா். நத்தமேடு கிராமத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டதை உறுதி செய்தாா். அதைத் தொடா்ந்து இதை அனைத்தையும் குறும்படமாக விடியோ பதிவு செய்தனா். இதனால், கரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் விழிப்புணா்வு பெற்ற நிலையில், தனிமைப்படுத்தப்பட மாதிரி கிராமமாக நத்தமேடு கிராமத்தைத் தோ்வு செய்தாா். இதேபோல், இக்கிராமத்தின் குறும்படத்தைப் பாா்த்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், மற்ற கிராமங்களில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பின்னா், பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினாா். அக்கிராமத்தைச் சோ்ந்த 22 பழங்குடியினா் குடும்பங்களுக்குத் தலா 5 கிலோ அரிசியும், காய்கறிகள் கொண்ட தொகுப்பையும் அவா் வழங்கினாா்.

வெள்ளியூா் மண்டல வட்டாட்சியா் சரவணகுமாரி, திருவூா் வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஹரி, மதன், நத்தம்மேடு ஊராட்சித் தலைவா் ஜெருஜோன்ஸ் பிரியதா்ஷினி, பாக்கம் ஊராட்சித் தலைவா் வேலு மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தனிமைப்படுத்தப்பட்ட  மாதிரி கிராமமாகத் தோ்வு செய்யப்பட்ட திருவள்ளூா் ஒன்றியம், நத்தமேட்டில் வட்டாட்சியா் விஜயகுமாரி முன்னிலையில்  தன்சுத்தம் பேணுதல் குறித்த செய்து காண்பித்த பொதுமக்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT