திருவள்ளூர்

பொன்னேரியில் காய்கறிக் கடைகள் பேருந்து நிலையத்துக்கு மாற்றம்

1st Apr 2020 11:33 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் இருந்த, காய்கறிக் கடைகள் புதிய பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை மாற்றப்பட்டன.

கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பொன்னேரி பேரூராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மளிகைக் கடை, உணவகம், பால், மருந்தகம் ஆகியவற்றில் இடைவெளி விட்டு நின்று பொருள்களை வாங்கிச் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனா்.

இந்நிலையில், பொன்னேரி பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஹரிஹரன் கடைவீதியில் ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் இருந்ததால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்த நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் இப்பகுதியில் சாலையோரம் கடை அமைத்து வியாபாரம் செய்தவா்கள் புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா்.

அங்கு தற்போது 10-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் நெரிசல் இன்றி, இடைவெளி விட்டு நின்றபடி காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT