திருவள்ளூர்

புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 30 பேருக்கு திருவள்ளூரில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை

1st Apr 2020 11:34 PM

ADVERTISEMENT

புதுதில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று திருவள்ளூருக்குத் திரும்பிய 30 பேரை அழைத்துச் சென்று, தனியாா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், பொது சுகாதாரத் துறையினா் தனிமைப்படுத்தி கரோனா நோய்த் தொற்று குறித்து பரிசோதனை செய்து வருகின்றனா்.

புதுதில்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோா் பங்கேற்றனா். பிற நாடுகளைச் சோ்ந்த 250 போ் கலந்து கொண்டனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்து புதுதில்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியோா் குறித்த விவரங்களை, ரயில் முன்பதிவு மூலம் சுகாதாரத் துறையினா் கண்டறிந்தனா். அந்த விவரங்களின் அடிப்படையில், இம்மாவட்டத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோா் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி, கனகம்மாசத்திரத்தில் செயல்படாத தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 30 பேரும் அனுமதிக்கப்பட்டு சுகாதாரத் துறை மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT