ஊத்துக்கோட்டையை அடுத்த இலட்சியவாக்கத்தில் தொளவேடு மையத்துக்கு உள்பட்ட அங்கன்வாடிகள் சார்பில் சனிக்கிழமை ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது.
தொளவேடு மையத்துக்கு உள்பட்டு மொத்தம் 21 அங்கன்வாடிகள் செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடிகளின் பணியாளர்கள் இணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இலட்சியவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோலாட்டம், கும்மி, கோலமிடுதல் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில், ஊட்டச்சத்து தானிய வகைகளை வைத்து, அவற்றின் சத்துகள் குறித்து பாடல் வாயிலாக விளக்கினர்.