பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள மலையாள மகமாயி தேவி கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை யாத்ரா தானம், கும்ப ஏற்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து, காலை 9 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.