திருவள்ளூர்

தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

10th Sep 2019 04:48 AM

ADVERTISEMENT


பெரியபாளையம் அருகே பணி வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையத்தை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இக்கிடங்கில் லாரிகளில் வரும் தனியார்  நிறுவனத்தின் பொருள்கள் இறக்கி வைக்கப்பட்டு, சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு உள்ளூரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி, சிஐடியுவினர் முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து வந்த பெரியபாளையம் போலீஸார் கிடங்கு உரிமையாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT