திருவள்ளூர்

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 03:58 AM

ADVERTISEMENT


திருத்தணியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
திருத்தணி கமலா திரையரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநிலத் துணைச் செயலர் ஞானபிரசன்னா தலைமை வகித்தார்.
இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் முதுகலை ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த 150 பேர் பங்கேற்றனர். 
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கப் பள்ளிகளை ஒன்றிணைப்பதைக் கைவிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஸ்ரீபெரும்புதூரில்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோஅமைப்பினர் ஸ்ரீபெரும்புதூர் வட்டார  வளர்ச்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கல்விக்கொள்கை 2019-ஐ ரத்து செய்ய வேண்டும், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளோடு இணைப்பதைக் கைவிட வேண்டும், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மற்றும் பணி மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்ய வேண்டும், காவல்துறையால் புனையப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டச் செயலாளர் ஆறுமுகம்  தலைமை வகித்தார். 
அரசு ஊழியர் சங்க வட்டச் செயலர் மருதன் கண்டன உரையாற்றினார். இதில், சங்க நிர்வாகிகள் பாலாஜி, ரமேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT