வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

கோயிலுக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

DIN | Published: 07th September 2019 03:58 AM


திருத்தணி முருகன் கோயிலுக்கு முறையாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு கோயில் நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனர்.
திருத்தணி முருகன் கோயிலுக்குச் சொந்தமான கடைகள் ம.பொ.சி சாலையில் உள்ளன. இக்கடைகளை தனிநபர் ஒருவர் கோயில் நிர்வாகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்து, உள்வாடகைக்கு விட்டாராம். 
இந்நிலையில், கோயிலுக்கு முறையாக வாடகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அதன்பேரில் திருத்தணி முருகன் கோயில் உதவி ஆணையர் ரமணி, மேலாளர் பழனி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் அருணாசலம் உள்ளிட்ட வருவாய்த் துறையினர்  வெள்ளிக்கிழமை அங்கு சென்று கடைகளில் உள்ள பொருள்களை அப்புறப்படுத்திவிட்டு, சீல் வைத்தனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மாணவர் உள்பட 5 பேருக்கு டெங்கு பாதிப்பு
மாற்றுத் திறனாளிகள் 157 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
சிறுபான்மையினருக்கான இலவச திறன் வளர்ப்புப் பயிற்சிக்கு 20-இல் நேர்காணல்
சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு அக்.18-க்குள் பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம்
20-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்