திருவள்ளூர்

கார் மோதி ஒருவர் பலி

7th Sep 2019 03:56 AM

ADVERTISEMENT


திருத்தணி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணியை அடுத்த நாபளூர் பகுதியைச் சேர்ந்தவர் விகடன் (45). இவர் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் ஆற்காடு குப்பத்தில் நடைபெற்ற வாரச் சந்தைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பேருந்து  நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் விகடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த விகடனின் உறவினர்கள் மற்றும் லட்சுமாபுரம் பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த கனகம்மாசத்திரம் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். அப்போது, லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே விபத்துகளைத் தடுக்க உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT