திருவள்ளூர்

மரக்கன்று நட வலியுறுத்திப் பேரணி

4th Sep 2019 07:44 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,000 மேற்பட்டோர் மரக்கன்று நடக்கோரி செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.
தஞ்சாவூர் காவிரி ஆற்றின் கரையோரம் மரக்கன்றுகளை நட வலியுறுத்தியும், மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் ஈஷா மையத்தின் ஊத்துக்கோட்டை பகுதி தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் பள்ளி மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். 
திருவள்ளூர் சாலையிலிருந்து பஜார் தெரு வரை ஊர்வலமாகச் சென்ற இப்பேரணியில், மரக்கன்றால் ஏற்படும்  பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய பலகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT