திருவள்ளூர்

திருவள்ளூர், திருத்தணி பகுதிகளில் மழை

4th Sep 2019 04:22 AM

ADVERTISEMENT

திருவள்ளூர் பகுதியில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் வழிந்தோடியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
திருவள்ளூர் பகுதியில் சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. 
இதைத் தொடர்ந்து, மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணிநேரம் மழை பெய்தது.
இந்த மழையால் தாழ்வான பகுதிகளான பஜார், காய்கறி சந்தை மற்றும் சாலைகளிலும் மழைநீர் வழிந்தோடியது. இதனால் நகர் முழுவதும் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. 
இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருத்தணியில்...
திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வெயில் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாலை, 4.45 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர், ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
காற்று, இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் திருத்தணி ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை உள்பட பல்வேறு தெருக்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து ஆறாக ஓடியது. திடீரென ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு வீட்டுக்குச் சென்றனர்.
மழையால் சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT