திருவள்ளூர்

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது

4th Sep 2019 04:20 AM

ADVERTISEMENT


திருத்தணி அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருத்தணியை அடுத்த டி புதூரைச் சேர்ந்த விஸ்வநாதனின் மகன் ராஜ்குமார் (25). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸின் மகன் நிர்மல் குமாருக்கும் (22) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை விஸ்வநாதன், அவரது மகன் ராஜ்குமார் இருவரும் வேலைக்குச் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்படத் தயாராயினர். 
அப்போது அங்கு வந்த நிர்மல்குமார் அரிவாளால் விஸ்வநாதன், ராஜ்குமார் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றார். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.   இதுகுறித்து அறிந்த திருத்தணி போலீஸார் வழக்குப் பதிந்து நிர்மல்குமாரை கைது செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT