திருவள்ளூர்

செப்.6-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

4th Sep 2019 07:43 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 6) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநில அளவில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கில், தனியார் வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், வரும் வெள்ளிக்கிழமை (செப். 6) திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
இதில், பல தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயம் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்று, பயன்பெறலாம். அதனால் கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட நாளில் பங்கேற்றுப்  பயன்பெறலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப்  பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது.       
இதேபோல் ஆக.16, 30 ஆகிய நாள்களில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் பல்வேறு தனியார்  நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் தங்கள் நிறுவனத்துக்குத் தகுதியான 69 பேர் தேர்வு செய்யப்பட்டு, அந்த  இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT