திருவள்ளூர்

காவல் மாணவர் படையில் சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

4th Sep 2019 04:21 AM

ADVERTISEMENT


பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காவல் மாணவர் படையில் சேர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி. அரவிந்தன் வலியுறுத்தினார். 
  திருவள்ளூர் வட்டார அளவில் காவல் மாணவர் படை பயிற்சி தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை முகாம் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.    
முகாமுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் தலைமை வகித்துப் பேசியது:
 பள்ளிகளில் சிறந்த ஒழுக்கமான மாணவர்களை உருவாக்கும் நோக்கில் காவல் துறை சார்பில் காவல் மாணவர் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக மாநில அளவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காவல் மாணவர் படை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 8, 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் காவல் மாணவர் படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இம்மாவட்டத்தில் மட்டும் 150 பள்ளிகளில் குறிப்பிட்ட வகுப்புகளில் தலா 22 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளித்து வரப்படுகிறது. இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த கல்வி பாதிக்காமல், வாரந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி அளிக்க அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆசிரியரும், மாணவிகளுக்கு ஆசிரியையும் வழிகாட்டுதல் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், காவல் துறை நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பு, வட்டாரப் போக்குவரத்து அலுவலக செயல்பாடு மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பெறுதல், ஆட்சியர் அலுவலக செயல்பாடு, அரசு மருத்துவமனையின் செயல்பாடு, நீதிமன்ற நடைமுறை, வனத்துறை பாதுகாப்பு, 18 வயதுக்கு குறைவானோர் வாகனங்களை இயக்கக் கூடாது, சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை குறித்து நேரடியாக அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து விபத்துகளைத் தவிர்க்கும் வகையில்  சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அந்தந்த பள்ளிகள் உள்ள பகுதிகளைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் மூலம் காவல் குறித்த பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்ய உள்ளது. இதற்கு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். 
   இம்முகாமில் காவல் மாணவர் படை பிரிவு மேற்பார்வையாளர் விஸ்வநாத் ஜெயின் பங்கேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு காவல் மாணவர் படை பயிற்சியின் செயல்பாடுகள், அதைத் தொடர்ந்து ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். இதில், திருவள்ளூர் வட்டார அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சியில் காவல் துணைக்காவல் கண்காணிப்பாளர் கங்காதரன், காவல் ஆய்வாளர்கள் மகேஸ்வரி, தமிழ்வாணன், கண்ணபிரான், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT