திருவள்ளூர்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

4th Sep 2019 04:20 AM

ADVERTISEMENT


பொன்னேரி அருகே திங்கள்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞரை மறித்து அரிவாளால் வெட்டிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மீஞ்சூர் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் (40) . தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பொன்னேரி வந்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஆலாடு அருகே உள்ள மனோபுரம் பகுதியில் சென்றபோது, முகத்தை துணியால் மூடியபடி இவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனங்களில் 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் அருளை வழிமறித்து நிறுத்த முயன்றுள்ளனர். அப்போது அருள் நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து, அவரை துரத்திச் சென்று மறித்து, அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில், பலத்த காயமடைந்த அருள் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அருளை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிந்து அருளை வெட்டிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT