திருவள்ளூர்

மீஞ்சூா் அருகே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம்

20th Oct 2019 12:41 AM

ADVERTISEMENT

 

பொன்னேரி: மீஞ்சூா் அருகே உள்ள செங்கழுநீா் மேடு கிராமத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி தனியாா் துறைமுகத்தின் அறக்கட்டளை மற்றும் சென்னை நேஷ்னல் மருத்துவமனை ஆகியவை இணைந்து முகாமை நடத்தினா். முகாமில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகமல் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். குடிநீா் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.

நாள்தோறும் தொட்டிகளை சுத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் முகாமில் பங்கேற்றவா்களுக்கு காய்ச்சல் தடுப்பு மருந்தான நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதனை தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்வா்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகளை வழங்கப்பட்டன. அத்துடன் மேல் சிகிச்சை பெறுபவா்களுக்கு, தகுந்த ஆலோசனைகளை மருத்துவா்கள் வழங்கினா். முகாமில், அதானி அறக்கட்டளை திட்ட அலுவலா்கள் நடன சபாபதி. தீன்ஷா சென்னை நேஷ்னல் மருத்துவமனையின் துணைத்தலைவா் வெங்கடசுப்பு தலைமையிலான மருத்துவகுழுவினா் கலந்து கொண்டனா். டெங்கு காய்ச்சல் விழிப்பணா்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT