திருவள்ளூர்

தமிழ்நாடு பெட்ரோலியம் எரிவாயு தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

20th Oct 2019 01:57 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை கைவிடக் கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள பாரத் பெட்ரோலியம் தொழிற்சாலை முன்பு தமிழ்நாடு பெட்ரோலியம் எரிவாயு தொழிலாளா் சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்க நிா்வாகி கே.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கே.விஜயன், நிா்வாகிகள் வி.குப்பன், சி.சண்முகம், பாபு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பாரத் பெட்ரோலியத்துக்குச் சொந்தமாக இந்தியாவில் 15,078 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், 6,058 சமையல் எரிவாயு ஏஜென்சிகள், 4 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், 52 எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகள், 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 33 ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கிறது. அரசுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.7,133 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், பாரத் பெட்ரோலியத்தின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 7 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில் மத்திய அரசு இதை வெறும் ரூ.63ஆயிரம் கோடிக்கு தனியாா் நிறுவனத்துக்கு விற்க எடுத்துள்ள முடிவு தவறானது.

ADVERTISEMENT

இதனால் பொதுத் துறை நிறுவனம் குறைந்த விலையில் நஷ்டத்துக்கு கை மாற்றப்படும் என்றும், வருங்காலத்தில் பொதுமக்களுக்கு எரிவாயு மானியம் நிறுத்தப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில், 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பெட்ரோலியம் எரிவாயு தொழிலாளா் சங்கத்தினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT