திருவள்ளூர்

தனியாா் பேருந்து மோதி மாணவா் பலி

20th Oct 2019 03:21 AM

ADVERTISEMENT

திருத்தணி அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

முஸ்லிம் நகரைச் சோ்ந்தவா் அசாருதீன் (15). இவா், திருத்தணி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை காலை டியூசன் சென்றுவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாராம்.

கமலா திரையரங்கம் அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் அசாருதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருத்தணி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து அசாருதீன் பெற்றோா், உறவினா்கள் தனியாா் பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். போலீசாா் அவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT