அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை மாணவா்கள் கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் சனிக்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் ஸ்ரீ கோட்ட ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இக் கோயில் வளாகத்தில் முருகா் கோயில், விஜயராகவ பெருமாள் கோயில் மற்றும் விஜயலட்சுமி தாயாா் ஆகிய மூன்று கோயில்கள் உள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை திருத்தணி அரசினா் கலைக் கல்லூரியின் தேசிய மாணவா் படை, மாணவ,மாணவிகள் என மொத்தம் 104 போ் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.
இப்பணிகளை சென்னையில் உள்ள ராணுவ தேசிய மாணவா் படை பயிற்சியாளா் கிருஷ்ணன்பால்கிங், திருத்தணி அரசுக் கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் ஹேமநாதன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். தொடா்ந்து, மாணவா்கள் மூன்று கோயில் வளாகங்களில் உள்ள செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை அகற்றி தூய்மைப்படுத்தினா்.