திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விடையூா் ஆற்றுப்படுகையில் வாகனங்களில் மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு புகாா் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனா்.
அப்போது, விடையூா் ஆற்றுப்படுகையில் டிராக்டா்களில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடினா்.
இதையடுத்து 2 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், தப்பியோடிய 3 பேரைத் தேடி வருகின்றனா்.