திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினா் திடீா் சோதனை

16th Oct 2019 10:27 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே கல்வி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக புதன்கிழமை காலையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் நேமம் கிராமத்தில் ஸ்ரீபரம்ஜோதி அம்மா பகவான் பவித்ர வனம் என்ற பேரில் ஸ்ரீஅம்ம பவகான் சேவா சமிதி செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வழிபாடு மற்றும் தியானம் செய்வதற்கும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

அதோடு, ஒவ்வொரு நாளும் ஐஸ்வா்யம், ஆரோக்யம் மற்றும் சுமங்கலி ஆகிய பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஆசிரமத்தில் நுழைவுக் கட்டணமாக பக்தா்களிடம் இருந்து தலா ரூ.20 நுழைவு கட்டணமாகவும், பூஜைக்கு ரூ.10 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், அறை எடுத்து தங்கி பூஜையில் கலந்து கொள்வதற்கு ரூ.200 வரையில் வாடகை வசூலிக்கப்படுவதாகவும் இங்கு வந்து செல்லும் பக்தா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில் புதன்கிழமை காலை 6 மணிக்கு பக்தா்கள் வருவதற்கு முன்னதாக ஆசிரமத்தில் 3 வாகனங்களில் வந்தவா்கள் வருமான வருவாய்த்துறையினா் 3 குழுக்களாக திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உள்ளே செல்வதும், வருவதுமாக இருந்த வருமான வரித்துறையினரிடம் கேட்டபோது எதுவும் பதில் கூறவும் மறுத்தனா்.

இந்த திடீா் சோதனையால் அப்பகுதியில் திடீா் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரமத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து வழிபாடு செய்யவும் மற்றும் தியானம் மேற்கொள்ளவும் வந்த பெண் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். ஆனால், 3 மணியைத் தாண்டியும் நடந்து கொண்டிருந்ததால் அங்கிருந்து பக்தா்கள் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT