திருவள்ளூர்

மண்டல கைப்பந்து போட்டி: ஆலிம் முகமது சதக் கல்லூரி சாம்பியன்

6th Oct 2019 04:16 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான இரு நாள் கைப்பந்து போட்டியில் ஆலிம் முகமது சதக் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.
 அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், மண்டல அளவிலான கைப்பந்து போட்டி கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் குமரகுரு வரவேற்றார்.
 இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கைப்பந்து அணிகள் பங்கேற்றன.
 தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இறுதிப் போட்டியில், ஆலிம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், ஜே.என்.என். பொறியியல் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றன.
 தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் செயலர் டி.ஜே.ஆறுமுகம் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசை வழ

ADVERTISEMENT
ADVERTISEMENT