திருவள்ளூர்

வீட்டில் பதுக்கிய ஒரு டன் செம்மரக்கட்டை பறிமுதல்

5th Oct 2019 12:25 AM

ADVERTISEMENT

சோழவரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சோழிப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று வீட்டை சோதனை செய்தனா்.

அப்போது, வீட்டின் மாடி பகுதியில் ஒரு டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவற்றைப் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ. 20 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT