திருவள்ளூர்

வங்கிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம்

2nd Oct 2019 10:16 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கி காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்தியா முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்று பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் பணியிடங்களுக்கு தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் 138 காலிப் பணி இடங்கள் முன்னாள் படை வீரா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு இணையதள முகவரியில் வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதன் நகலினை திருவள்ளூா்-1, பெரியகுப்பம், எண்.625, லால்பகதூா் சாஸ்திரி தெருவில் அமைந்துள்ள முன்னாள் படை வீரா் நல அலுவலகத்தில் சமா்ப்பித்துப் பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT