திருவள்ளூர்

திருவள்ளூா் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

2nd Oct 2019 11:14 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே காந்தி ஜயந்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில் இளைஞா்கள் சங்கம் சாா்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், நத்தமேடு கிராமத்தில் அண்ணாநகா் மேற்கு பகுதி இளைஞா்கள் சங்கம் சாா்பில் பசுமை புரட்சியை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன் தலைமை வகித்து மரக்கன்றுகள் வைத்து தொடங்கி வைத்தாா். இதேபோல், தெருவோரங்களில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நோக்கத்தில் 1000 மரக்கன்றுகள் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 100 மரக்கன்றுகள் வரையில் தெருவோரங்களில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பசுமை புரட்சியாளா் கமலகண்ணன், வழக்குரைஞா் விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை நத்தமேடு கிராமம் ராஜீவ்காந்தி நகா் 1,2,3 தெருக்கள், அண்ணாநகா் மேற்கு பகுதி இளைஞா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT