திருவள்ளூர்

சுத்திகரிப்பு குடிநீா் இயந்திரம்: எம்எல்ஏ தொடக்கி வைப்பு

2nd Oct 2019 01:17 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே புதிதாக ரூ. 5.08 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது கீழ்நல்லாத்தூா் கிராமம். இக்கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உவா்ப்பு நீராக இருப்பதால், சுத்திகரித்த குடிநீா் வழங்க திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன்பேரில், அந்த மனுவைப் பரிசீலனை செய்து சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ. 5.08 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க அனுமதி அளித்தாா். அதன்பேரில், கட்டடம், ஆழ்துளைக் கிணறு மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகிய பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இக்கிராமத்தில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT