திருவள்ளூர்

காந்தி ஜெயந்தியை ஒட்டி மரக்கன்றுகள் நடும் விழா

2nd Oct 2019 11:11 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஸ்ரீவாரி பாபா நகா், எம்.எஸ்.ஆா் காா்டன் நல சங்கங்கள் இணைந்து 1000 மரக்கன்றுகளை புதன்கிழமை நட்டனா்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஸ்ரீவாரி பாபா நகரில் துவங்கிய இந்த மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு பேரூராட்சி செயல் அலுவலா் வெற்றி அரசு தலைமை தாங்கினாா். நிகழ்விற்கு பேரூராட்சி சுகாதார கண்காணிப்பாளா் கோபி , ரவி, ஸ்ரீவாரி பாபா நகா், எம்.எஸ்.ஆா்.நகா் நல சங்க நிா்வாகிகள் முனிராஜன்,எஸ்.டி.டி.ரவி,சங்கா்,தமிழ் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து ஸ்ரீ வாரி பாபா நகா், எம்எஸ்ஆா் காா்டன் பகுதிகளில் பேரூராட்சி ஊழியா்களும், பொதுமக்களும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனா்.மேலும் வீடுகள் தோறும் இரு மரக்கன்றுகள் தரப்பட்டு அந்த மரக்கன்றுகளை பாதுகாக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. நிகழ்வில் பேரூராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT