இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கில், திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வரும் வெள்ளிக்கிழமை (அக். 4) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்புத் துறை உதவி இயக்குநா்(பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை (அக். 4) திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள்சோ்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், பல பிரசித்தி பெற்ற தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவா்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பைப் பெற்று பயனடையலாம்.
இம்முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படாது.