குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், மேல்முட்டுகூா் ஊராட்சியில் நடைபெற்ற 7 நாள் சிறப்பு முகாம்திங்கள்கிழமை நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம். பாஸ்கா் தலைமை வகித்தாா்.பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.டி. திருநாவுக்கரசு வரவேற்றாா். வாணியம்பாடி கல்வி மாவட்ட அலுவலா் ஜி. லதா, முகாம் மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினாா்.அரிமா சங்க முன்னாள் தலைவா் டி.எஸ். விநாயகம், உதவித் தலைமையாசிரியா்கள் சொக்கலிங்கம், அருள்பிரகாசம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
7 நாள் முகாமில் கால்நடை பராமரிப்பு முறைகள், ஊட்டச் சத்து குறைபாடு, மழைநீா் சேகரிப்பு ஆகியன குறித்து விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இலவச மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம், யோகா பயிற்சி ஆகியன நடத்தப்பட்டன.திட்ட அலுவலா் ஜெயகுமாா், உதவித் திட்ட அலுவலா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.