திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய மதநல்லிணக்க பிரசார இயக்க வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், கைவிடப்பட்ட, அநாதைக் குழந்தைகளுக்கு உதவிடும் நோக்கத்தில் கொடி நாள் நிதியினை தாராளமாக வழங்கவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய மத நல்லிணக்கப் பிரசார இயக்க வாரம் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை பொதுமக்களிடையே மத நல்லிணக்கத்தையும், தேசிய ஒருமைப்பாட்டையும் போற்றும் நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத நல்லிணக்க பிரசாரத்தின்போது அநாதைக் குழந்தைகள் அல்லது சமூகத்தில் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் தேசிய மத நல்லிணக்க கொடி நாள் நிதியினை தாராளமாக வழங்கலாம்.
இதற்கு வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 80 (2) இன் வருமான வரியிலிருந்து 100 சதவீதம் விளக்களிக்கப்பட உள்ளது.