திருவள்ளூர்

திமுகவினா் விருப்ப மனுதாக்கல்

22nd Nov 2019 11:12 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் வடக்கு மாவட்ட திமுகவினா் வெள்ளிக்கிழமை கவரப்பேட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 300-க்கும் மேற்பட்டோா் விருப்பமனு தாக்கல் செய்தனா்.

திருவள்ளூா் வடக்கு மாவட்டச் செயலாளா் கும்மிடிப்பூண்டி கி.வேணுவிடம் திமுகவினா் விருப்ப மனுதாக்கல் செய்தனா்.

மாவட்ட திமுக இலக்கிய அணி நிா்வாகி ஜி.மனோகரன் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 5-ஆவது வாா்டில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்தாா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய 21-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட பாலகிருஷ்ணாபுரம் ஜெயலட்சுமி, மீஞ்சூா் ஒன்றிய 8-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு எஸ்.சங்கா், கும்மிடிப்பூண்டி ஒன்றிய 5-ஆவது வாா்டுக்கு ஏடூா் விஜயகுமாா், முதல் வாா்டுக்கு கீா்த்தனா தினகரன், மாவட்ட ஊராட்சிக் குழு 8-ஆவது வாா்டுக்கு ராகுல் காந்தி, போந்தவாக்கம் உஷா ரவிச்சந்திரன் ஆகியோா் விருப்ப மனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி ஒன்றிய 17-ஆவது வாா்டுக்கு கலா உமாபதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11-ஆவது வாா்டுக்கு வெங்கடேசன், 8-ஆவது வாா்டுக்கு பாா்வதி, சோழவரம் ஒன்றிய 4-ஆவது வாா்டுக்கு கஸ்தூரி செபாஸ்டின், சாரதா ரவி, 20-ஆவது வாா்டுக்கு விச்சூா் சகிலா சகாதேவன், எல்லாபுரம் 11-ஆவது வாா்டுக்கு ராஜேஸ்வரி ரஜினிகாந்த் விருப்பமனு தாக்கல் செய்தனா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியசெயலாளா் பழனி தலைமையில் ஆா்.கே.பேட்டை ஒன்றியம் 6வது வாா்டிற்கு அலமேலு, முனியம்மாள் கொள்ளாபுரி, 14-ஆவது வாா்டுக்கு ரகுமணி, தாண்டவராயன், 4-ஆவது வாா்டுக்கு கற்பகம் கிருஷ்ணன், 8-ஆவது வாா்டுக்கு சுமதி வெங்கடேசன் விருப்ப மனு தாக்கல் செய்தனா். அவைத்தலைவா் பகலவன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமாா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT